இன்றைய சூழலில் உடல்நலத்தையும் வேலையையும் சமநிலையில் வைத்திருப்பது பலருக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது; ஆயுர்வேதப் பார்வையில் சில பரிந்துரைகள் இங்கே
-
தடுப்பு: தொழில் சார்ந்த ஆபத்துகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆயுர்வேதம் முக்கியத்துவம் தருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான ஊட்டச்சத்து, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தைக் கையாளும் முறைகள் ஆகியவற்றின் மூலம் உடலின் இயற்கையான எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவது இதில் அடங்கும்.
-
சமநிலைக் குலைவுகளை அடையாளம் காணுதல்: உடல் உழைப்பு, நச்சுப் பொருட்களுடன் தொடர்பு, ஒழுங்கற்ற வேலை நேரம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் வெவ்வேறு தொழில்கள் உடலிலும் மனதிலும் சமநிலைக் குலைவை உண்டாக்கக்கூடும் என்பதை ஆயுர்வேதம் ஏற்கிறது. ஒருவரின் தனித்தன்மையான உடல் அமைப்பையும் சமநிலைக் குலைவுகளையும் புரிந்துகொள்வதன் மூலம், வெவ்வேறு தொழில்களோடு தொடர்புடைய குறிப்பிட்ட பலவீனங்களையும் உடல்நல அபாயங்களையும் அடையாளம் காண ஆயுர்வேதம் உதவும்.
-
மன அழுத்த மேலாண்மை: யோகா, தியானம், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சிகள்) போன்ற ஆயுர்வேதப் பயிற்சிகள், அழுத்தம் நிறைந்த வேலைச் சூழலில் மன அழுத்தத்தைக் கையாளவும் மன நலனை மேம்படுத்தவும் சிறந்த கருவிகளாக இருக்கும். இந்தப் பயிற்சிகள் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், அமைதியான நிலையை அதிகரிக்கவும், தொழில் சார்ந்த அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகின்றன.
-
மூலிகைத் துணை: தொழில் சார்ந்த ஆபத்துகளின் விளைவுகளைக் குறைப்பதில் ஆயுர்வேத மூலிகைகளும் கலவைகளும் துணையாக நிற்கும். அஸ்வகந்தா, பிராமி போன்ற அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் மூலிகைகள் உடல் அழுத்தத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும், சுறுசுறுப்பை அதிகரிக்கவும், சிந்தனைத் திறனுக்குத் துணை நிற்கவும் உதவுகின்றன; திரிபலா போன்ற நச்சு நீக்கும் மூலிகைகள், தொழில் சூழலால் உடலில் சேர்ந்த நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.
-
உணவுப் பரிந்துரைகள்: தொழில் சார்ந்த சவால்களுக்கு இடையேயும் சிறந்த உடல்நலத்தையும் உயிர்ப்பையும் காத்துக்கொள்ள, ஒவ்வொருவரின் பிரகிருதிக்கும் (தனிப்பட்ட உடல் அமைப்பு) சமநிலைக் குலைவுகளுக்கும் ஏற்ற உணவு வழிகாட்டுதல்களை ஆயுர்வேதம் தருகிறது. புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சத்துள்ள மூலிகைகள் நிறைந்த சமச்சீர் உணவுக்கு முக்கியத்துவம் தருவது, தொழில் சார்ந்த அழுத்தங்களின் பாதிப்புகளிலிருந்து உடலை வலுப்படுத்த உதவும்.
-
பஞ்சகர்ம சிகிச்சைகள்: தொழில் சார்ந்த ஆபத்துகளால் உடலில் நச்சுகள் சேர்ந்திருக்கும் அல்லது சமநிலை குலைந்திருக்கும் நிலைகளில், பஞ்சகர்மம் (வமனம், விரேசனம், வஸ்தி, நஸ்யம், ரக்த மோட்சம்) எனப்படும் ஆயுர்வேத நச்சு நீக்கும் சிகிச்சைகள் பயன் தரும். இந்தச் சிகிச்சைகள் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், உடல் திசுக்களுக்குப் புத்துணர்வு தரவும், சமநிலையை மீட்டு ஒட்டுமொத்த உடல்நலத்தையும் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தவும் உதவுகின்றன.



