உள்ளடக்கத்திற்குச் செல்ல
+91 80156 17055  /  drsanjeevi@sdaac.inவாட்ஸ்அப்பில் பொருட்கள் பட்டியல்
ENதமிழ்

சிறப்புச் சிகிச்சைகள்

எலும்பு சீரமைப்பு, ரத்த ஓட்டம், வலி நிவாரணம், உடல் எடை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான கைமுறைச் சிகிச்சைகள்.

பாத சிகிச்சை (foot reflexology)

பாத சிகிச்சை (foot reflexology)

கால்களில் செய்யப்படுகிறது; பயன் உடல் முழுவதும் தெரிகிறது. கால்களிலும் பாதங்களிலும் உள்ள 14 மர்ம புள்ளிகளை அழுத்தி, அங்கு முடியும் நரம்புகளைத் தூண்டும் மசாஜ் இது. தனியாகவும் செய்யலாம், முழு உடல் சிகிச்சையுடன் சேர்த்தும் செய்யலாம்; நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.

பயன்கள்

  • சோர்ந்த கால்களுக்கும் பாதங்களுக்கும் ஓய்வு
  • ரத்த ஓட்டம் மேம்படும்
  • கண் சோர்வு குறையும்
  • மன அழுத்தமும் பதற்றமும் குறையும்
  • நல்ல தூக்கம் வரும்

இது பற்றி கேட்க: பாத சிகிச்சை (foot reflexology)

எலும்பு சீரமைப்பு சிகிச்சை (chiropractic)

எலும்பு சீரமைப்பு சிகிச்சை (chiropractic)

முதுகெலும்பைக் கைகளால் சரிசெய்து இயல்பான இயக்கத்தை மீட்டுத் தந்து, முதுகெலும்பு நரம்புகளின் எரிச்சலைக் குறைக்கும் சிகிச்சை.

எதற்குப் பயன்படுகிறது

  • இடுப்பு வலியும் இடுப்பு நரம்பு வலியும் (sciatica)
  • கழுத்து வலி
  • தலைவலி
  • ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் வரும் வலி
  • விளையாட்டு மற்றும் சாலை விபத்துக் காயங்கள்
  • மூட்டுவாத வலி

இது பற்றி கேட்க: எலும்பு சீரமைப்பு சிகிச்சை (chiropractic)

கப்பிங் சிகிச்சை

கப்பிங் சிகிச்சை

கண்ணாடி அல்லது சிலிகான் குடுவைகளை வைத்து உறிஞ்சுவதன் மூலம், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்பட்டு வலி குறைகிறது. பிரச்சினைக்கு ஏற்ப உலர் (dry), ஈர (wet), நகர்த்தும் (running), விரைவு (flash) என்ற கப்பிங் முறைகளை நாங்கள் செய்கிறோம்.

பயன்கள்

  • சருமத்தில் ரத்த ஓட்டம் மேம்படும்
  • வலியைத் தாங்கும் திறன் கூடும்
  • வீக்கம் குறையும்
  • செல் அளவிலான நோய் எதிர்ப்பு சக்திக்குத் துணைநிற்கும்

இது பற்றி கேட்க: கப்பிங் சிகிச்சை

உடல் எடை குறைப்புத் திட்டம்

உடல் எடை குறைப்புத் திட்டம்

ஸ்நேகனம் (சூடான மருந்து எண்ணெய் மசாஜ்), ஸ்வேதனம் (சூடான பொடிக்கிழி) ஆகியவற்றுடன் ஆவிக் குளியலையும் சேர்த்து, உடலை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறோம். உங்கள் தோஷ அமைப்பைப் பரிசோதித்து, உடலைச் சமநிலைக்குக் கொண்டுவர ஏற்ற உணவுமுறை பரிந்துரைக்கப்படும்.

இது பற்றி கேட்க: உடல் எடை குறைப்புத் திட்டம்

ஆத்திகுளம், மதுரையில் எங்களைச் சந்திக்க

முன்பதிவு செய்து ஆலோசனை பெறலாம். அழைக்கவும், வாட்ஸ்அப் செய்யவும் அல்லது படிவத்தை அனுப்பவும்; நாங்கள் தொடர்பு கொள்கிறோம்.

ஆலோசனை பதிவு செய்ய

நேரத்தை உறுதிப்படுத்த நாங்கள் உங்களை அழைப்போம்.

வாட்ஸ்அப் விரும்புகிறீர்களா? +91 80156 17055 எண்ணுக்கு அனுப்பவும்.