யஷ்டி மது, அதிமதுரம் வேர் (licorice root) என்றும் அழைக்கப்படுகிறது; பரந்த அளவிலான உடல்நலப் பயன்களைக் கொண்ட ஆற்றல்மிக்க ஆயுர்வேத மூலிகை இது. ஆயுர்வேதத்தில் இது ஒரு “ரசாயனம்” எனக் கருதப்படுகிறது; அதாவது உடலைப் புதுப்பித்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் மூலிகை. தமிழில் இதன் இனிப்புச் சுவையின் காரணமாக இதை “அதிமதுரம்” என்று அழைக்கிறோம்.
இதன் முக்கியப் பயன்களில் சில:
- செரிமான நலம்: யஷ்டி மது இரைப்பைப் புண்களைத் தணித்து, செரிமானத்தை மேம்படுத்தி, அமிலத்தன்மையையும் நெஞ்செரிச்சலையும் குறைக்கிறது.
- சுவாச நலம்: சளியை வெளியேற்றும், வீக்கத்தைத் தணிக்கும் பண்புகளால் இருமல், சளி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்க இது உதவுகிறது. தொண்டை எரிச்சல் இருக்கும்போது யஷ்டி மது குச்சித் துண்டுகளை மென்று சாப்பிட்டால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது: யஷ்டி மது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- கல்லீரல் நலம்: நச்சுக்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாத்து, அது ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.
- சரும நலம்: யஷ்டி மதுவின் வீக்கம் தணிக்கும், நிறத்தைத் தெளிவாக்கும் பண்புகள் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி (எக்ஸிமா), சொரியாசிஸ் போன்ற சரும நிலைகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயனுள்ளவை.
யஷ்டி மதுவை உட்கொள்ள பல வழிகள் உள்ளன:
- பொடி: ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரிலோ பாலிலோ கலந்து தினமும் இரு வேளை அருந்தவும்.
- கஷாயம்: ஒரு டீஸ்பூன் பொடியை சூடான நீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டவும். இந்தக் கஷாயத்தை நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்தவும்.
- சப்ளிமெண்ட்: யஷ்டி மது காப்ஸ்யூல்கள் அல்லது மாத்திரைகள் பெரும்பாலான உடல்நலக் கடைகளில் கிடைக்கும்.



